என் விடை பிறந்த நாள் இன்று
பெற்ற விடையை விடை பெற விட மாட்டேன்!
காத்திருப்பேன்; காதலை காத்து இருப்பேன்
அந்த காதல் எனது காற்றானதே!
என்னுள் எரிந்த இருட்டை விரட்டி அடித்தாய்;
வெளிச்சத்தை வெளியே விடுவேனா?
அணையாமல் காப்பேன், கட்டி அணைத்துக்கொள்வேன்
நீ என் குளிர்க்கு வந்த நெருப்பாச்சே...
கணிதத்தின் முடிவிலியை ரசித்தவனுக்கு
சந்தோசத்தின் பின்யத்தை காண்பித்தாய்.
அளவில்லா சாந்தம் தந்தாய்
அந்த வானத்தை போல..
ஏக்கத்தில் தேக்கம் கண்டிருந்தேன்
தேங்கியவனை கிளப்பினாய், நதி நீரா நீ?
நிலையை நாடி அலைபாய்ந்த மனம் எனது
நிலைமை அறிந்து நிலையான மெய்யாக
வாழ்கை வேருக்கு திடம் தந்தாய், நிலமாக...
ஐந்து புலன்களும் நீ,
என் பிரபஞ்சமே நீ.
பிரபஞ்சத்தில் தஞ்சம் வேண்டி காத்திருப்பேன்.
நாடி துடிக்கும் வரை, உன் துணை நாடி துடிப்பேன்.

0 Value-adds:
<< Home